படுபயங்கரமாக களைகட்டவிருக்கும் பிக்பாஸ்.. போட்டியாளர், விருந்தினர் என உள்ளே செல்லும் சண்டைகோழிகள்?




பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியினை மக்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜல்லிக்கட்ட போராட்டத்தில் களமிறங்கி வீரத்தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜுலியை பிக்பாஸில் அழைத்து அவரது சுயரூபத்தினை வெளிக்காட்டினர்.

இந்நிலையில் யூடியூப் பிரபலமான சூர்யா தேவியை பிக்பாஸ் போட்டியாளராக களமிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஏனென்றால் சூர்யா தேவி வனிதாவின் மூன்றாவது திருமணத்தினை எதிர்த்து வனிதாவை தாறுமாறாக விமர்சித்து காணொளி வெளியிட்டிருந்தார்.

இதனால் சூர்யா தேவி போட்டியாளராக உள்ளே சென்றால், இவரது எதிரி முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா சிறப்புவிருந்தினராக செல்வார் என்றும் இதை வைத்து பிரபல ரிவியில் நடக்கவிருக்கும் பிக்பாஸ் உச்சத்திற்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது போட்டியாளர்களாக யாரெல்லாம் செல்லவிருக்கின்றனர் என்பதை தெரியாமல் மக்கள் திகைத்து வருகின்றனர்.

Comments